திண்டுக்கல்: மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த சங்கரராஜ் மனைவி முத்துலட்சுமி(61). என்பவர் ஆந்திராவில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரயில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த பாளையம் அருகே வரும்போது முத்துலட்சுமி எதிர்பாராத விதமாக இரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















