திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் (12.06.2026), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் SJHR பிரிவு உதவி ஆய்வாளர்கள் திருமதி.சீதா மற்றும் திருமதி ரூபி ஆகியோரின் தலைமையில் மிட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO), குழந்தைத் திருமணத்தின் தீமைகள், இணையவழி குற்றங்கள் மற்றும் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்களான 181 மற்றும் 1098 ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.




















