மதுரை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த (29.03.2026)-ம் தேதி முதல் (03.04.2026)-ம் தேதி வரை நடைபெற்ற 69-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் குற்ற புலனாய்வில் அறிவியல் உதவிகள் பிரிவில் (Scientific Aids to Investigation), தமிழக காவல்துறை சார்பில் கலந்து கொண்ட குழுவில் மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 69-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் குற்ற புலனாய்வில் அறிவியல் உதவிகள் (SAI) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று வந்த சார்பு ஆய்வாளர் திரு.M.அர்ச்சுனன் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு.அர்விந்த், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















