சென்னை: சென்னையில் இந்திய போலீஸ் ஓய்வு அகாடமி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான ஒற்றுமை குறித்து கூட்டம். சென்னையில் இந்திய போலீஸ் ஓய்வு அகாடமி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான ஒற்றுமை குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காவல் நிலையம் செல்லும் போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள், போராட்ட சமயங்களில் காவல்துறையின் அடக்குமுறை எவ்வாறு உள்ளது மேலும் தற்போது தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் திருப்தி தரும் வகையில் உள்ளதா இது போன்ற பல்வேறு விஷயங்களை கருத்துக்களாக அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்தனர். இதில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ஆவடி. ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கள் அமைப்பின் சார்பில் கருத்துக்களை எடுத்துரைத்தார். அனைவரது கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சரி வர நடவடிக்கை எடுக்காத அந்த அதிகாரிகளிடம் மாற்றத்தை கண்டிப்பாக கொண்டு வருவோம் என உறுதியளித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி