திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு வந்துள்ள குஜராத் மாநில ஆயுதப்படை காவலர்களின் 2 கம்பெனிகளுக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடன் தற்போது வந்துள்ள குஜராத் மாநில ஆயுதப்படை காவலர்களும் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



















