தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது, தமிழகம் முழுவதும் 200748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிப்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு, கடந்த வாரம் வெளியிட்டது. அதில் தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலி இடங்களை நிரப்ப வேண்டும், இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 7ஆம் தேதி வரை பெற வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலித்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆடைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு அன்று பணி ஆணைகளை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் (30/09/ 2022) அன்று (21) வயதினை பூர்த்தி செய்து இருக்க வேண்டும், பொது பிரிவினர் அதிகபட்சமாக (32), வயது வரையும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக (37) வயது வரையும் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி : ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மிதிவண்டி ஓட்டு தெரிந்திருக்க வேண்டும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி : விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பதாரர் தங்களது புகைப்படம், கையொப்பம், கல்வித் தகுதி சான்றிதழ், ஓட்டுனர் உரிம சான்றிதழ், ஜாதி சான்றிதழை, பதிவேற்றம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்க கடைசி நாள் (07/11/2022), உங்கள் சொந்த ஊரில் வேலை, தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க :
https://www.cra.tn.gov.in/tamilversion/index_t.php#
https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171