மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (18.04.2026) உசிலம்பட்டி உட்கோட்டம், எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரணப்பட்டி முதல் சீலநாயக்கன்பட்டி வரை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வு அமைதியான மற்றும் சீரான தேர்தலை உறுதி செய்ய காவல்துறையின் உறுதியை வெளிப்படுத்துகிறது.




















