திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி சேர்ந்த தங்கவேல்(53) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தங்கவேலுவின் வீடு திறந்து கிடப்பது கண்டு வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையிலான போலீசார் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சோதனை மேற்கொண்டனர். மேலும் தங்கவேல் கொடுத்த தகவலின்படி அவர் ரகசிய இடத்தில் வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போகாமல் அப்படியே இருந்தது தெரிய வந்தது. மேலும் மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















