திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த குன்னுத்துப்பட்டி பூ விவசாயி வேலுச்சாமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வேலுச்சாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















