திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84 CCTV கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆயுதப்படை காவலர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 130 காவல்துறையினர் சுழற்சி முறையில் பல அடுக்குகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சியாமளா தேவி அவர்கள் நேரில் ஆய்வு செய்து, காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.



















