தேனி: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், (04.05.2026) அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவது, பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொள்வது குறித்து காவல் அதிகாரிகளுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.



















