திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருதமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிள்ளையார்பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு(36) என்பவரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.2,50,000 பணம், வாக்காளர் பட்டியல், டோக்கன்கள் உள்ளிட்டவை இருந்தன அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர், துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.




















