திருவாரூர்: திருவாரூர் பகுதியில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி 83 நபர்களிடம் 83 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்ட திருவாரூர் மாவட்ட குற்ற பிரிவு வழக்கின் எதிரிகள் – 1.சக்திவேல் த/பெ நாகராஜன் , துர்க்காலையா ரோடு, திருவாரூர். 2. திருமதி. கோவிந்தலக்ஷ்மி , க/பெ பாலகிரிஷ்ணன், துர்க்காலையா ரோடு, திருவாரூர் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் (20.04.2025) அன்று -1.சக்திவேல் த/பெ நாகராஜன் , துர்க்காலையா ரோடு, திருவாரூர். 2. திருமதி. கோவிந்தலக்ஷ்மி , க/பெ பாலகிரிஷ்ணன், துர்க்காலையா ரோடு, திருவாரூர் ஆகியோருக்கு 6 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை (ம) ரூபாய். ரூ.30.000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிகளுக்கு தண்டனை பெற்று தந்த அதிகாரிகள் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலர் ஆகியோரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண்கரட், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.



















