செங்கல்பட்டு: கொட்டமடக்கிபட்டி பகுதியில், மது விற்பனை நடந்து வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெரியசாமி (50) என்பவரை பிடித்து விசாரித்தனர். முன்கூட்டியே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி, தனது மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்து, மது கேட்பவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.
பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், அவரை கைது செய்து, மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 634 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















