மதுரை : மதுரை திருமங்கலத்தில் இருந்து சமயநல்லூரை நோக்கி கொரியர் சர்வீஸ் வேன் வந்தது. தேனியை சேர்ந்த டிரைவர் சிவா (38), வேனை ஓட்டிவந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அருகே உள்ள நான்குவழிச்சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த வேன், கார் மீது மோதியது. அதில், கார் உருண்டு சம்பவ இடத்திலேயே படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் முனியாண்டி பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்துதகவல் அறிந்த ஆஸ்டின் பட்டிபோலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















