மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர இரவு நேர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (05.06.2026) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த அதிரடி நடை ரோந்து மூலம் திருட்டு, வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் போன்ற குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















