மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், (11.06.2026)-ம் தேதி அதிகாலை சுமார் 03.30 மணியளவில் கொட்டாம்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், RJ 02 UA 8631 என்ற இன்னோவா காரை சோதனை செய்தபோது, அந்த காரின் உண்மையான பதிவு எண் TN 05 BR 1685 என்பதும், அந்த காரில் சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 521 கிலோ கிராம் அளவுள்ள குட்காவை கடத்தி வந்த 1) விக்ரம் குமார், (28). த/பெ. மாணா ராம், சாஞ்சியோ காவாஸ், தேபாவாஸ், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் மற்றும் 2) கிசான், (25). த/பெ.மன்சா ராம், தான்பூர் கிராமம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 521 கிலோ கிராம் அளவுள்ள குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















