மதுரை: நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, மதுரை மாவட்ட காவல்துறையின் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றவாளி அர்ஜுனன் (25). மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மதுரை POCSO நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், வழக்கை தொடர்ந்து கண்காணித்து சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் திருமதி காஞ்சனா தேவி மற்றும் நீதிமன்ற தலைமை பெண் காவலர் திருமதி மஞ்சுளா தேவி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.




















