தேனி: தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று கல்விச் சாதனை புரிந்த காவல்துறையினரின் குழந்தைகளை பாராட்டும் நிகழ்ச்சி தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா அவர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினார். மேலும், மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என ஊக்கமளித்தார்.




















