வேலூர்: வேலூர் காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மகேந்திரன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 44.1 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




















