வேலூர்: வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (31.05.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.U. சிவராமன், இ.கா.ப., அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, காவல்துறையில் அவர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக மேற்கொண்ட சேவைகளை நினைவுகூர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஓய்வுபெற்ற பின்னரும் சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சிறப்பாக வாழ வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.



















