திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணையவழி குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .தெய்வம் அவரது வழிகாட்டுதலில், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் ‘காந்திகிராம வேலைவாய்ப்பு மாணவர்கள் திட்ட அமைப்பு’ மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு ஆய்வாளர்.ரேணுகாதேவி மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜமாணிக்கம் தலைமையிலான காவலர்கள் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்.குற்றங்கள் குறித்த விளக்கம்: இணையவழி பண மோசடி, பிஷிங் (Phishing), அடையாளத் திருட்டு (Identity Theft), போலி இணைப்புகள் (Fake Links), சமூக வலைதள மோசடிகள், இணையவழி துன்புறுத்தல் (Cyberbullying), டிஜிட்டல் தொந்தரவு மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. ரகசிய தகவல்கள் பாதுகாப்பு. வங்கி அல்லது அரசு நிறுவனங்களில் இருந்து பேசுவதாக கூறினாலும், OTP, PIN, பாஸ்வேர்டு, CVV எண் போன்ற ரகசிய தகவல்களை யாரோடும் பகிரக் கூடாது என எச்சரிக்கப்பட்டது.
பாதுகாப்பு வழிமுறைகள். தேவையற்ற குறுஞ்செய்திகள், போலி சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் மிரட்டல்களை எதிர்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட எண்களை உடனடியாக பிளாக் (Block) செய்து காவல்துறைக்கு புகார் தெரிவித்து உதவி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
M-Kavach செயலி. இணைய பாதுகாப்பிற்காக மத்திய/மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் ‘M-Kavach’ செயலியைப் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களிடையே சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















