திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி to தண்டல்காரன் பட்டி சாலையின் பாலத்தில் நல்லாம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்(எ)ராசு(26). என்பவர் பட்டாகத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ரோட்டிலும், பாலத்திலும் தீப்பொறி பறக்கும் விதமாக பட்டகத்தியை உரசி கொண்டிருந்தார். போலீசார் சுற்றி வளைத்து ராஜ்(எ)ராசை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















