திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு, நொச்சியோடைபட்டி அருகே சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி வந்த பாத்ரூம் முருகன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் ASP.மஞ்சிமா, நகர்DSP.கார்த்திக் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நல்லாம்பட்டியை சேர்ந்த மருதை மகன் மூர்த்தி(47). வெள்ளைச்சாமி மகன் குமரேசன்(36). கூவனூத்தை சேர்ந்த திருப்பதி நாயுடு மகன் பாலு(49). கிழக்கு மரியாநாதபுரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் நவீன்குமார்(20). மற்றும் சேகர் மற்றும் (17). வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















