திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி பிரபல அல்வாவை வாங்க அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த சூழலில், போலியான பெயரில் அல்வா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், போலியான லேபிள் பயன்படுத்தி அல்வா விற்பனை செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.
அங்கிருந்து 1,000 கிலோ அளவிலான போலி அல்வா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்று வருவதோடு, மேலும் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
















