திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் நகர குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ், காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நகர்ப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உசிலம்பட்டி வடகாட்டுப்பட்டியை சேர்ந்த பாண்டிய கண்ணன் (45). திண்டுக்கல் பெரிய பொன்னிமாந்துரை எம்ஜிஆர் நகரை சேர்ந்த அரவிந்த் (24). ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















