திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலமுன்னீர்பள்ளம், ஈஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் 20. என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் தெரிவித்துள்ளார்.




















