திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த (27-03-2019) அன்று தந்தை மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து பழனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கானது பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.





















