சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான, நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு, தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துபாயில் இருந்து வந்த, விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்க இலாகா, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு, பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.




















