மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செக்கானூரணி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கால்நடை திருட்டு வழக்கில் புகாா் பதிவு செய்வதற்கு முன்பே கிடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகத்தின் பேரில் நடை ரோந்து போலீசார் குற்றவாளிகளை பிடித்து கால்நடைகளை மீட்டெடுத்தனர். மற்றும் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வாகன திருட்டு வழக்கில் திருடு போன இரு சக்கர வாகனத்தை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாகன தணிக்கையின் போது கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட திருடு போன வாகனத்தை மீட்டெடுத்தும் விரைந்து குற்றவாளிகளை கைது செய்தும் சொத்துக்களை பறிமுதல் செய்த செக்கானூரணி, வாலாந்தூர் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினரை நேரில் அழைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு B .K. அரவிந்த் இ.கா.ப. அவர்கள் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.




















