தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, இணையவழி குற்றங்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அச்சமின்றி காவல்துறையினரிடம் புகார் அளிப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




















