தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி தலைவன்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த அஸ்வின்ராம் (19). என்ற இளைஞர் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளர், சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















