திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, கல்லுப்பட்டி சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்த சந்தன மரத்தை மர்மநபர் தொடர்ச்சியாக வெட்டி திருடினர். இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் மேற்படி விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சந்தன மரத்தை வெட்டி திருட முயன்ற போது விவசாயி மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அம்பாத்துரை போலீசார் மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதிகாரிப்பட்டியை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த பாகன் மகன் தேக்கமலை(31). என்பதும், அவர் சந்தன மரத்தை வெட்டி திருட முயன்றது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் தேக்கமலையை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















