திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த விருதலைபட்டி பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி, சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விருதலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே டீக்கடையில் வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குப்புசாமி மனைவி ரேவதி(44). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 32 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















