திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜோத்தாம்பட்டி, சாமிநாதபுரம், மஞ்சநாயக்கன்பட்டி, சாணார்பட்டி, அதிகாரிபட்டி, வேம்பார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த மருதநாயகம், அருண்பாண்டி, ராஜா, கார்த்திக், பிரேம்குமார், சத்யேந்திரன், முருகேசன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 260 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















