விருதுநகர்: வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 85 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




















