கோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் நடத்திவந்தார். கொரோனாகாலத்தில் இவரிடம் பணம் வாங்கியவர்கள் யாரும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி ரேவதி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்

A. கோகுல்



















