திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள S.B.I ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது. திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் D.I.G முத்துச்சாமி மற்றும் எஸ்.பிகள் கார்த்திகேயன், ராஜேஷ், கண்ணன், பாலகிருஷ்ணன், ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.