திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது காரில் இருந்த நபர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பொதுமக்கள் அந்த நபரை பிடித்து வேடசந்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பொதுமக்கள் ஒப்படைத்த நபர் திருநெல்வேலி சேர்ந்த முருகன் மகன் சுத்தமல்லிசுந்தர்(34). என்றும் இவர் மீது 13-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் இவர் தற்போது ரெட்டியார்சத்திரம் அருகே சுக்காம்பட்டி பகுதியில் இருந்து வருவதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















