சென்னை: மாங்காடு காவல் நிலைய பகுதியில் ஏரியா தாதா போட்டியில் முன் விரோதம் காரணமாக அடிக்கடி மோதி கொண்ட இரு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏரியா தாதா போட்டியில் கடந்த 20.03.2022 அன்று மாங்காடு கங்கை அம்மன் கோயில் தெரு பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் குரு (எ) குருமூர்த்தி மற்றும் வீரா தரப்பும் முன் விரோதம் காரணமாக கல் கட்டை கொண்டு அடித்து குரு மூர்த்தி கத்தியால் வெட்டியதில் வீரா படுகாயம் அடைந்தனர்.
உடன் தகவல் கிடைத்து சம்பவ இடம் சென்ற மாங்காடு காவல் நிலைய patrol ரோந்து வாகனத்தை கல் மற்றும் கட்டையால் தாக்கி சேதபடுத்தி நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று 02.04.22 அன்று ஆவடி மாவட்ட காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவு படி மேற்படி குரு (எ) குருமூர்தி (விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்) மற்றும் பரத்வாஜ் (இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா




















