திருநெல்வேலி: நெல்லை மாநகரம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் சிக்கிய ரூ 16,720/ மதிப்புடைய சுமார் 25 கிலோ எடையுடைய குட்க மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.ஒருவர் கைது. திருநெல்வேலி மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.K.சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள், தலைமையிலான தனிப்படை போலீசாரான தலைமை காவலர்கள் திரு.நவராஜ் HC 187, திரு.வெள்ளப்பாண்டி HC 1210, திரு.செந்திப்பாண்டி HC 1484, திரு.ஆனந்த் 1506, திரு.பொன்மோசஸ் HC 1570, திரு.அல்டஸ் பிபின் HC 1620 ஆகியோர்.
கொடுத்த ரகசிய தகவலின் பேரில், 12-03-2022 ம் தேதியன்று, சந்திப்பு குறுக்குத்துறை விலக்கு பகுதியில் சந்திப்பு பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் திரு.தங்கதுரை அவர்கள், போலீசார் வாகன சோதனையின் போது, TVS XL இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த முத்துவாப்பா (51) என்பவரை நிறுத்தி சோதனையிட்டதில் சாக்கு மூட்டையில் ரூ 16,720/ மதிப்புடைய சுமார் 25 கிலோ எடையுடைய குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் TVS XL இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த, சந்திப்பு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பறிமுதல் செய்து, வழக்கு விசாரணை செய்து வருகின்றார்கள்.




















