கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) திருமதி அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மக்களுடன் இணக்கமான காவல் பணியை மேற்கொள்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார். மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















