கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. வேலுமணி அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















