கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் பாரம்பரிய தேர்த் திருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது. திருவிழாவையொட்டி மாவட்ட காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் காரணமாக, திருவிழா காலம் முழுவதும் எந்தவித சிறு குற்றச் சம்பவங்களும் பதிவாகாமல் அமைதியான சூழலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால், தேர்த் திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நிறைவடைந்ததாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



















