திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மாருதி ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஒரு பெண் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. பின்னர் நின்று கொண்டிருந்த வாகனங்களிலும் மோதி நின்றது. இந்த விபத்தில் பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். காரில் இருந்த 3 பேர் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.



















