கரூர் : கரூர் மாநகரில் , மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, வந்த தகவலின்பேரில் உணவு கடத்தல் பிரிவு, காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்தின்பேரில், காவல் துறையினர், பின் தொடர்ந்து சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள் கரூர் முத்து நகர் பகுதியில், ஜவுளி துணி உற்பத்தி செய்யும், நிறுவன பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள கடைக்குள் சென்றது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை, தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த மோட்டார் சைக்கிளில், ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.



















