திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை லிப்ட் கேட்பது போல் நிறுத்தி வழிமடக்கி பீர் பாட்டிலால் தாக்கி தங்க மோதிரம் செல்போன் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்ற மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பஜனை கோவில் தெருவை சார்ந்தவர் சந்துரு( 23 ). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்துவிட்டு பொன்னேரி ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி ஆரணி ஆற்றின் பாலம் அருகே இரண்டு பேர் மோட்டார் சைக்கிள் நிறுத்தி லிப்ட் கேட்டு அதில் பயணம் செய்தனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஏலியம்பேடு செல்லும் சாலையில் வாகனத்தை நிறுத்துமாறு கூறி அடையாளம் தெரியாத இரண்டு பேர் கீழே இறங்கிய போது அங்கிருந்த மூன்றாவது நபர் சந்துருவை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி தங்க மோதிரம் பிரேஸ்லெட் செல்போன் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று தலைமறைவாயினர் இதனால் காயமடைந்த சந்துரு ரத்தத்துடன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டதை அடுத்து பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஏலியம்பேடு மெயின் ரோட்டை சார்ந்த எழில்வேந்தன் (20) என்பவரை கைது செய்து அதே பகுதியான பெரியார் நகரை சார்ந்த இரண்டு இளஞ்சிரார்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர் இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. மில்டன்



















