மதுரை: மதுரை ஆரப்பாளயத்தில் அனாதையாக கிடந்த இருசக்கரவாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரப்பாளையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அருகே,
நீண்ட நாட்களாக கேட்பாரற்று அனாதையாக கிடந்த இருசக்கர வாகனங்கள் குறித்து, வாடிப்பட்டி முடுவார்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் கரிமேடு போலீசில் புகார் செய்தார்.0
போலீசார், அந்த ஆறு பைக்குகளையும் மீட்டனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானது,
திருடப்பட்டவையா, என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















