திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர், குரு நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த ரங்கேஷ் மனைவி வசந்தி(59). என்பவர் வீட்டில் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















