கடலூர் : கடலூர் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் (15), வயது மாணவி. இவர் தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக அவரது தந்தையே, மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை பார்த்த மாணவியின் தாய், தனது கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து மாணவியின் தந்தை, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில், புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் , போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தந்தையை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெற்ற மகளையே தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
                                











 
			 
		    



